பிளஸ் 2 தேர்வில் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை துணை சபாநாயகர் தம்பிதுரை வாழ்த்து


பிளஸ் 2 தேர்வில் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை துணை சபாநாயகர் தம்பிதுரை வாழ்த்து
x
தினத்தந்தி 16 May 2017 12:58 AM IST (Updated: 16 May 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–2 தேர்வில் சாதனை படைத்த பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2016–17–ம் கல்வியாண்டில் மொத்தம் 686 மாணவ, மாணவிகள் பயின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொதுத்தேர்வினை எழுதினர். தேர்வு முடிவு கடந்த 12–ந் தேதி வெளியானது. இதில் இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். குறிப்பாக கணித பாடத்தில் 16 பேரும், வேதியியல் பாடத்தில் 12 பேரும், உயிரியல் பாடத்தில் 8 பேரும் 200–க்கு 200 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அத்துடன் கணித பாடத்தில் 23 பேரும், இயற்பியல் பாடத்தில் 10 பேரும், வேதியியல் பாடத்தில் 19 பேரும், உயிரியல் பாடத்தில் 12 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 8 பேரும் 200–க்கு 199 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோபிசங்கர் என்ற மாணவர் 1200–க்கு 1184 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் இடத்தையும், விஜயசூர்யா என்ற மாணவர் 1178 மதிப்பெண் பெற்று 2–ம் இடத்தையும், 1177 மதிப்பெண் பெற்று அஜீத்குமார் என்ற மாணவர் 3–ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

100 சதவீதம் தேர்ச்சி

மேலும் இந்த பள்ளி கடந்த 13 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையை பெற்ற பள்ளியாக விளங்கி வருகிறது. சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை எம்.பி., நேரில் அழைத்து, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சிவராஜ், மேலாளர் கூத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பள்ளியின் மேலாளர் கூத்தரசன் கூறியதாவது:– இந்த பள்ளியில் 2016–17–ம் கல்வியாண்டு முதல் 11, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் ஆந்திரா யுனிவர்சிட்டி, ஐதராபாத் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பயின்ற அனுபவமும், திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக கொண்டு நடத்தி வருகிறோம் என்றார்.

Next Story