நெய்வேலி அருகே திருடு போன ஐம்பொன் சிலையை விளை நிலத்தில் வீசிச் சென்ற மர்ம மனிதர்கள்
நெய்வேலி அருகே திருடு போன ஐம்பொன் சிலையை விளை நிலத்தில் மர்ம மனிதர்கள் வீசிச்சென்றனர்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே கொள்ளிருப்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 9-ந்தேதி இந்த கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோவிலில் இருந்த உற்சவர் மாரியம்மன் சிலையை திருடிச்சென்றனர். அந்த சிலை 15 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுபத்ரா கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் கொள்ளிருப்பில் இருந்து மேலக்குப்பம் செல்லும் வழியில் பழனிவேல் என்பவரது நிலத்தின் ஓரத்தில் சாமி சிலை ஒன்று கிடந்தது.
போலீசார் விசாரணை
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிலை கொள்ளிருப்பு மாரியம்மன் கோவிலில் திருடுப்போன ஐம்பொன் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த சிலையை திருடி வயல்வெளி ஓரத்தில் வைத்துவிட்டு சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story