சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.2½ கோடி தங்க கட்டிகள் சிக்கியது, 2 பேர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.2½ கோடி தங்க கட்டிகள் சிக்கியது, அசாமில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது
சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அசாமில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்க கட்டிகளை கடத்தி அதை அசாம் மாநிலத்துக்கு கொண்டுவந்து பின்னர் கவுகாத்தி ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வருவதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய் புலனாய்வு போலீசார் மாற்று உடையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து தீவிரமாக கண்காணித்தனர். அவர்கள் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளை நோட்டமிட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் கையில் பைகளுடன் சுற்றித்திரிந்தனர். உடனே அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.
ரூ.2½ கோடி தங்க கட்டிகள்
அப்போது அந்த பைக்குள் கருப்பு நிற ‘டேப்’ சுற்றப்பட்ட செவ்வக வடிவிலான சில பொருட்கள் இருந்தன. அதை போலீசார் எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ 330 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தன. உடனே போலீசார் அந்த தங்க கட்டிகளை எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது அதன் மதிப்பு ரூ.2 கோடியே 45 லட்சத்து 62 ஆயிரத்து 671 என்பது தெரியவந்தது.
உடனே போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த டி.எல்.தாரா, எல்.கே.ஜோ என்பது தெரியவந்தது. இந்தோ-மியான்மர் எல்லை பகுதி வழியாக தங்க கட்டிகளை இந்தியாவிற்கு கடத்தி அவற்றை அசாமில் இருந்து சென்னை கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர் இதுகுறித்து வருவாய் புலனாய்வு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story