போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னை புறநகர் பகுதிகளில் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னை புறநகர் பகுதிகளில் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன, மக்கள் கடும் அவதி
பூந்தமல்லி,
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் குறைவான பஸ்களே இயக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியுற்றனர்.
வேலை நிறுத்தம்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியுற்றனர்.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து வழக்கமாக தாம்பரம், கோயம்பேடு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 166 அரசு பஸ்கள் இயக்கப்படும். போராட்டத்தின் காரணமாக அதிகளவில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வராததால் பூந்தமல்லி பணிமனையில் இருந்து 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
மினி பஸ்கள்
இதையடுத்து பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை, தாசில்தார் லட்சுமணன், ஆர்.டி.ஓ. நெடுமாறன் ஆகியோர் பணிமனைக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவர்களை பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். பின்னர் கனரக வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களை வரவழைத்து அவர்களை கொண்டு பஸ்களை இயக்கினர்.
மேலும் வேறு இடங்களில் இருந்து மினி பஸ்களை வரவழைத்து அதில் பயணிகளை ஏற்றி அனுப்பினர். அதோடு தனியார் நிறுவனம் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்களில், அந்த வாகனங்கள் செல்லும் வழித்தடத்தின் ஸ்டிக்கர் ஒட்டி, பயணிகளை அனுப்பி வைத்தனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
இதேபோல் அய்யப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து தினந்தோறும் 150 அரசு பஸ்கள் இயக்கப்படும் நிலையில், நேற்று வேலை நிறுத்தத்தை முன்னிட்டு 36 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்களில் அதிக பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக 2 பணிமனைகளின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே அய்யப்பன்தாங்கலில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் போரூர் ஏரி அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் மீது கற்களை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இருப்பினும், இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்
ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆவடி பணிமனையில் இருந்து 30 பஸ்களும், அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து 40 பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் பஸ்களில் ஏற பொதுமக்கள் அலைமோதினர். போராட்டம் காரணமாக பொதுமக்கள் ஆட்டோ, தனியார் பஸ் மற்றும் ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஆவடி பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாதவரம் பணிமனையில் இருந்து 102 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 58 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பாடியநல்லூர் பழைய பஸ் பணிமனையில் 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் செங்குன்றம், புழல், மாதவரம், மாதவரம் பால்பண்ணை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Tags :
Next Story