கன்னிவாடி அருகே மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கன்னிவாடி அருகே மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
இதில், கன்னிவாடி அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், டி.புதுப்பட்டியின் மேற்கு புறத்தில் பரியேந்திர அய்யனார் கோவில் உள்ளது. இதன் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் புதிதாக மதுக்கடை அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்துள்ளனர். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
மேலும், அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ- மாணவிகள் சென்று வருகின்றனர். இதேபோல அங்குள்ள விவசாய தோட்டங்களுக்கு பெண்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கு மதுக்கடை அமைத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே டி.புதுப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பொய் வழக்கு
இதேபோன்று, சிலுவத்தூர் அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோவுகவுண்டன்பட்டி, திருமலைச்சாமிபுரம், உடைகுளம் ஆகிய கிராம மக்கள் கொடுத்த மனுவில், பெரியகோட்டையை சுற்றி 11 கிராமங்கள் உள்ளன. இந்தநிலையில் திண்டுக்கல்- சிலுவத்தூர் சாலையில் ஒத்தக்கடை அருகே புதிதாக மதுபானக் கடை அமைக்கப்பட்டது.
இந்த கடையை மூடக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது, கடை விற்பனையாளரை தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவுகவுண்டன்பட்டியை சேர்ந்த வீரப்பன், திருப்பதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்காக அடிக்கடி ஊருக்குள் புகுந்து போலீசார் அச்சுறுத்தி வருகின்றனர். எனவே பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். மேலும், பெரியகோட்டை ஊராட்சி பகுதிகளில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக சிறப்பு கிராம சபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மதுக்கடையை நிரந்தரமாக மூட...
இதேபோல, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள 16- புதூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், ஒட்டன்சத்திரம்- தேவத்தூர் சாலையில் சுமைதாங்கி அருகே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதை மூடக்கோரி நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினோம். இதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு மட்டும் கடையை மூட கலால் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த கடையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்கி உள்ளது. மேலும் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டும், குழியுமான சாலை
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் முருங்கை, வெங்காயம், மிளகாய் போன்றவை அதிகமாக சாகுபடி செய்து வருகிறோம். இந்த விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கு காவேரியம்மாபட்டி- பெரியகரட்டுப்பட்டி சாலையை பயன் படுத்தி வருகிறோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சாலையை சீரமைக்காததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால் சில கிராம மக்கள் லாரி, வேன் போன்ற வாகனங்களில் மனு கொடுக்க வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story