போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: திருப்பூர் மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, 90 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை
திருப்பூர்
அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்த போராட்டம்
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை நிறுத்தும் நோக்கில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 4 கட்டங்களாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையிலும் தோல்வி ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் மாலை முதலே அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படவில்லை. பயணிகளை ஏற்றி கொண்டு வந்த பஸ்கள் பயணிகளை குறிப்பிட்ட இடங்களில் இறக்கி விட்ட பின்னர் தங்களுக்கு உரிய பணிமனைக்கு திரும்பின. இதனால் வெளியூருக்கு அவசர கதியாக சென்று கொண்டிருந்த பயணிகள் ஆயிரக்கணக்கானோர் பாதி வழியிலேயே இறங்கியதால் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆனால் இந்த போராட்டத்திற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் ஆளுங்கட்சியின் போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர் மட்டுமே பஸ்களை இயக்கினார்கள்.
90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படவில்லை
இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்தபடி நேற்றுகாலை முதலே முழு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 90 சதவீதத்துக்கு அதிகமான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்தந்தபோக்குவரத்து பணிமனைகளிலேயே பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததால் பலர் தங்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். அவசரமாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மட்டுமே நேற்று தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். ஒருசில பஸ்களை தவிர டவுன் பஸ்களின் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டதால் திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டது.
அரசு பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் தேவையான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படாததால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஷேர் ஆட்டோ டிரைவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயணிகளுக்கான கட்டணத்தை அதிகரித்திருந்தனர். இந்த நிலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாகவே இருக்கும் திருப்பூர் குமரன் ரோடு, பார்க் ரோடு, அவினாசி ரோடு, பெருமாநல்லூர் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
கலெக்டர் ஆய்வு
புதிய பஸ்நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 90 சதவீதத்துக்கும் அதிகமான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒருசில அரசு பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றி சென்றன. விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக மாநகருக்குட்பட்ட பகுதிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ்நிலையங்கள், பஸ்நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஏராளமான போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த போராட்டத்தை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி திருப்பூர் பழைய பஸ்நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையங்களுக்கு சென்று போதிய பஸ்கள் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
பல்லடம்
இதுபோல் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 80 அரசு பஸ்களில் சுமார் 20 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இவற்றிலும் மதியத்துக்கு மேல் சில பஸ்கள் பணிமனைக்கு திரும்பி விட்டன. தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அத்துடன், சுற்றுலா பஸ்கள், உள்பட தங்களிடம் இருந்த பஸ்களை தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கினார்கள். ஆனாலும் பல்லடம் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
தற்காலிக பஸ் டிரைவர்கள்
அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக டிரைவர்கள், நடத்துனர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. பஸ்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் தற்காலிக பஸ் டிரைவர்களாக, தனியார் நிறுவன டிரைவர்கள் பஸ்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Tags :
Next Story