வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி விழா முல்லுண்டில் நடந்தது


வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி விழா முல்லுண்டில் நடந்தது
x
தினத்தந்தி 16 May 2017 3:15 AM IST (Updated: 16 May 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் நேற்றுமுன்தினம் முல்லுண்டு மேற்கு பாரதி சால் பகுதியில் கண்ணகி விழா நடந்தது.

மும்பை,

தமிழர்களின் கலாசாரத்தை விளக்கி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கண்ணகி விழா தீபம் ஏற்றி ஊர்வலம் நடத்தினார்கள். பின்னர் அங்கு நடந்த விழாவுக்கு வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழனி முருகேசன், ராஜேந்திரன், ராஜ்கோபால் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொன்.இனவாழவன், ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சியை சேர்ந்த டோமினிக், சுப்பிரமணி, நாதன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story