தகராறை விலக்கி விட முயன்ற மாமியார் மரக்கட்டையால் அடித்துக்கொலை தொழிலாளி கைது


தகராறை விலக்கி விட முயன்ற மாமியார் மரக்கட்டையால் அடித்துக்கொலை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 16 May 2017 3:46 AM IST (Updated: 16 May 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

கணவன்-மனைவி தகராறை விலக்கி விட முயன்ற மாமியாரை கூலித்தொழிலாளி மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுதொடர்பாக கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு,

தட்சிணகன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா மஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரசாத் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி உமாகுமாரி (28). இவரது தாய் குசுமா (54). ஜெயப்பிரசாத், தனது மனைவி, மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயப்பிரசாத் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதேப் போல் கடந்த 12-ந்தேதி குடிபோதையில் ஜெயப்பிரசாத் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் மனைவி உமாகுமாரியுடன் தகராறு செய்துள்ளார்.

மாமியார் சாவு

இதைதொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த குசுமா, இருவரையும் விலக்கிவிட முயன்றுள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த ஜெயப்பிரசாத், வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மாமியார் குசுமாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் குசுமா சரிந்து விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக செத்தார்.

கைது

இதுதொடர்பாக பண்ட்வால் புறநகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, மாமியாரை அடித்துக்கொன்றதாக ஜெயப்பிரசாத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story