சாலை தடுப்பு சுவரில் கார் மோதி தீப்பிடித்ததில் தனியார் நிறுவன அதிகாரி கருகி சாவு
கோவில்பட்டி அருகே நாற்கர சாலை தடுப்பு சுவரில் கார் மோதி தீப்பிடித்ததில் தனியார் நிறுவன அதிகாரி கருகி பலியானார்.
கோவில்பட்டி,
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜெப்ரி சாமுவேல்(வயது 54). சென்னை பெருங்குடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர் சென்னையில் உள்ள பிரபல டயர் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறையை முன்னிட்டு ஜெப்ரி சாமுவேல் தனது குடும்பத்தினருடன் பாளையங்கோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
மும்பையில் வசித்து வரும் சாமுவேலின் தங்கை துளசி கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று மும்பையில் இருந்து தனது குடும்பத்தினருடன் விமானத்தில் மதுரை வந்தார். அவர்களை அழைத்து செல்வதற்காக, பாளையங்கோட்டையில் இருந்து ஜெப்ரி சாமுவேல் தனது காரில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
உடல் கருகி சாவு
மதியம் 1.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் அருகில் சென்றபோது திடீரென்று கார் நிலைதடுமாறி, நாற்கர சாலையின் நடுவில் உள்ள ஓடைப்பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி மட்டும் தடுப்பு சுவரை தாண்டி ஓடைப்பாலத்தின் அருகில் நின்றது. உடனே கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜெப்ரி சாமுவேலால் வெளியே வர முடியாமல் தீயில் கருகி காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்தை பார்த்து இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைத்தனர்.
போலீசார் விசாரணை
நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் இறந்த ஜெப்ரி சாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த ஜெப்ரி சாமுவேலுக்கு ஜிஜி சாமுவேல் என்ற மனைவியும், இவாஞ்சலின், ஆங்கிளின் ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவாஞ்சலின் டாக்டருக்கு படித்து உள்ளார். ஆங்கிளின் பி.எஸ்சி. படித்து வருகிறார்.

Related Tags :
Next Story