ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்
லால்குடியில் ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டன.
லால்குடி,
லால்குடியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கடந்த 2010-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.20.50 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி, ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டது. பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் சர்வீஸ் சாலை எனப் படும் அணுகுசாலை மற்றும் மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் மேலும் ஓராண்டு காலதாமதத்திற்கு பின்பே முடிவடைந்தன.
ஆனால் பாலத்திட்டத்தின் ஒரு பகுதியான ரவுண்டானா அமைக்கும் பணிக்கு இடையூறாக நான்கு ரோடு பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் கோர்ட்டை நாடியதால் ரவுண்டானா அமைக்கும் பணி தடைபட்டது. இதனால் லால்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு தீராத பிரச்சினையாகவே இருந்து வந்தது.
கடைகள் அகற்றம்
இதற்கிடையே லால்குடி அரசு மருத்துவமனைக்கு சொந்தமான பகுதியில் ரவுண்டானா அமைக்க தேவையான இடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தனித்தனி பிரிவுகளாக இருந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வழக்காக விசாரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் கோர்ட்டை நாடாமல் முறைப்படி உரிய இழப்பீடு பெறப்பட்ட 25 கடைகள் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. இந்த பணிகள் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, தாசில்தார் ஜவஹர்லால் நேரு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையொட்டி லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story