ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மண்ணை வாரி இறைத்து போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் மண்ணை வாரி இறைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
34–வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மண்ணை வாரி இறைத்து போராட்டம்
அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மண்ணை வாரி இறைத்து ஹைட்ரோகார்பன் திட்டம் அழிந்து போகவேண்டும் என்று சாபமிட்டவாறு போராட்டம் நடத்தினர்.

Related Tags :
Next Story