அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்
தா.பழூர் அருகே அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பழூர்,
தமிழகம் முழுவதும் அரசே மணல் குவாரிகளை நடத்தும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் அரசு மணல் குவாரிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வாழைக்குறிச்சி, தென்கச்சி, இடங்கண்ணி ஆகிய ஊராட்சிகளில் அரசு மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அரசு நடத்தும் இந்த மணல் குவாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் நேற்று காலை மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் கொள்ளிட ஆற்றுப்பகுதிக்கு வரத்தொடங்கின.
மறியல் போராட்டம்
இதில் அதிருப்தியடைந்த வாழைக்குறிச்சி, மதனத்தூர், அடிக்காமலை, தென்கச்சி உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதனத்தூர் கொள்ளிட பாலத்தில் அமைந்துள்ள தா.பழூர் காவல் சரக சோதனை சாவடி அருகே தா.பழூர்-கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் வேதமூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தா.பழூர் பகுதியில் மணல் குவாரிகள் தேவையில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் தெரிவித்துள்ள கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தின் காரணமாக தா.பழூர்-கும்பகோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story