2–வது நாளாக வேலை நிறுத்தம் நெல்லையில், அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் தவிர்ப்பு
போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லையில் அரசு பஸ்கள் சரிவர ஓடவில்லை.
நெல்லை,
போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லையில் அரசு பஸ்கள் சரிவர ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் ஓடின.
வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி நேற்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் தான் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் நெல்லையில் 60 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
நேற்று 2–வது நாளாக நெல்லை மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் குறைவான அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குறைந்த அளவே அரசு பஸ்கள் ஓடியதால் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நெல்லை மாநகர பகுதியில் ஓடக்கூடிய பெரும்பாலான பஸ்கள் கூடின. ஆனால் நெல்லையில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்கின்ற பஸ்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. கங்கைகொண்டான், அணைத்தலையூர், காசியாபுரம், ஓட்டப்பிடாரம், சோலைச்சேரி, பிரான்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்கள், தென்காசி, செங்கோட்டைக்கு இயக்கப்பட்டன. நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட வேண்டிய டவுன் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மினிபஸ்கள் தென்காசி, தூத்துக்குடி வழித்தடத்தில் இயக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசிக்கு வழிதடத்தில் அனுமதிக்கப்படாத தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. நெல்லையில் இருந்து தச்சநல்லூர், டவுன் மற்றும் மேலப்பாளையம், தருவை, திருப்பணிகரிசல்குளம், தென்கலம்புதூர், வேப்பங்குளம், அருகன்குளம் ஆகிய ஊர்களுக்கு ஷேர் ஆட்டோ அதிக அளவில் இயக்கப்பட்டன.
நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட், டவுன் கணேஷ் தியேட்டர் ஆகிய இடங்களில் இருந்து கிராமபுறங்களுக்கு மினிபஸ்கள் இயக்கப்பட்டன. இந்த மினிபஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், வள்ளியூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ரெயிலில் கூட்டம்
பஸ்கள் இயக்கப்படாததால் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்தில் 2–வது நாளாக நேற்று பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவை ஆகிய ஊர்களுக்கு சென்ற ரெயில்களில் ஏறி பயணம் செய்தனர். இதனால் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் செங்கோட்டை சென்ற பயணிகள் ரெயில், திருச்செந்தூர் பயணிகள் ரெயில் ஆகியவற்றில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இது குறித்து கலெக்டர் கருணாகரன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் ஓடின. தற்போது தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இன்னும் கூடுதலாக பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்க அதிக அளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு நடத்தி வருகிறார். அவர் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்களின் உரிமம் ரத்து செய்வதுடன், உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும். என்றார்.
விஜிலாசத்யானந்த் எம்.பி. ஆய்வு
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு பணிமனையில் நேற்று விஜிலாசத்யானந்த் எம்.பி. ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள பாத்திரங்கள் சுத்தமாக கழுவப்படாமலும், டேபிள் துடைக்கப்படாமலும் மோசமான நிலையில் இருந்தது. உடனே விஜிலாசத்யானந்த் எம்.பி. அங்குள்ள சுயஉதவிக்குழு தலைவியிடம் நீங்கள் சீருடை அணிந்து பணியாற்றவேண்டும். அம்மா உணவகம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று கூறினார். இதில் அ.தி.மு.க.(அம்மா அணி) மாவட்ட செயலாளர் பாப்புலர்முத்தையா, பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர் தச்சை மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story