ஏரல் அருகே துணிகரம் தொழிலாளி வீடு புகுந்து 14½ பவுன் நகைகள் திருட்டு
ஏரல் அருகே, தொழிலாளி வீடு புகுந்து 14½ பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல்,

வீடு புகுந்து...
ஏரல் அருகே உள்ள இடையற்காடு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (வயது 27). கடந்த 14–ந்தேதி ஜெயாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, அவரை, பாலமுருகன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆஸ்பத்திரியில் ஜெயா சிகிச்சை பெற்ற பின்னர், நேரம் ஆகிவிட்டதால் அவர்கள் அன்று இரவில் மஞ்சள்நீர்காயலில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கினர்.
பாலமுருகனின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் அவரது வீட்டின் பின்பக்க மரக்கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 14½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
மறுநாள் காலையில் பாலமுருகன் மனைவியுடன் வீட்டுக்கு சென்றார். அப்போது, அவர்களது வீட்டின் பின்பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாலமுருகன் ஏரல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டை போலீஸ் மோப்ப நாய் ‘ஜியோ‘ மோப்பம் பிடித்தது. பின்னர் அந்த நாய் இடையற்காடு ஊருக்குள்ளேயே நீண்ட தூரம் ஓடியது. ஆனாலும் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story