ஈரோடு பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
ஈரோடு பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வி.குழந்தைசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் முருகையா, பணியாளர்கள் சம்மேளன மாநில இணை பொதுச்செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பிச்சை எடுத்து போராட்டம்
அரசு பஸ் டிரைவர்–கண்டக்டர்கள் சிலர் அரைநிர்வாணமாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் உடலில் நாமம் போட்டுக்கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள் கைகளில் திருவோடுகளை ஏந்தியபடி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ‘ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும்’, ‘மகன், மகளுக்கு திருமணம் செய்வதற்காக பணப்பலன்களை வழங்க வேண்டும்’ உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனர்.
அரைநிர்வாண கோலத்தில் வந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற கண்டக்டர் ஜெகதீசன் (வயது 58), டிரைவர் சுப்பிரமணி (62) ஆகியோர் கூறியதாவது:–
பணப்பலன்கள்
நாங்கள் ஓய்வு பெற்ற பிறகு எந்த பணப்பலனும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எங்களுடைய சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்த பணத்தை தான் நாங்கள் கேட்கிறோம். எங்களது மருத்துவ செலவுக்கும், மகன், மகளின் திருமண செலவுக்கும் பணத்தை வட்டிக்கு வாங்கி செலவு செய்கிறோம். எனவே எங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்’’, என்றனர். இதேபோல் அரசு பஸ் கண்டக்டர் சேகர் (37) கூறும்போது, ‘‘எங்களது சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்கும், எல்.ஐ.சி. காப்பீடு திட்டத்திற்கும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை முறையாக செலுத்துவதில்லை’’, என்றார்.
இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சுகுமாரன், ஐ.என்.டி.யு.சி. பொறுப்பாளர் ரவி, எச்.எம்.எஸ். பொறுப்பாளர் சண்முகம் உள்பட ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story