அந்தியூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அந்தியூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பள்ளிபாளையத்தில் உள்ள அந்தியூர்–மேட்டூர் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வந்த 4–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் பள்ளிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அதிக அளவில் மது பிரியர்கள் வந்தனர். இதன்காரணமாக அந்த பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. எனவே பள்ளிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளிபாளையம், பச்சாம்பாளையம், அண்ணாமடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தாசில்தார் செல்லையா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் தாசில்தார் செல்லையா கூறுகையில், ‘அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் டாஸ்மாக் நிர்வாக மேலாளர் லியாகத் முன்னிலையில் பள்ளிபாளையம் டாஸ்மாக் கடை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்,’ என்றார்.
தாலுகா அலுவலகத்தை முற்றுகை
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் வந்தனர். அலுவலகத்தில் தாசில்தார் செல்லையா அவருடைய அறையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அந்தியூர் போலீசார் பொதுமக்களிடம் கூறுகையில், ‘தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்த உங்களில் 10 பேர் மட்டும் வந்தால் போதும். எனவே மற்றவர்கள் தாலுகா அலுவலகத்துக்கு வெளியே நிற்க வேண்டும்,’ என்றதுடன் தாலுகா அலுவலக இரும்பு கிரில் கதவை இழுத்து பூட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘10 பேர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது. நாங்கள் அனைவரும் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம். என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை நாங்கள் அனைவரும் நேரடியாக அறிய வேண்டும்,’ என்றனர். அப்போது டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷமிட்டனர். போராட்டம் தீவிரம் அடைவதை கண்டதும் பொதுமக்கள் அனைவரையும் தாலுகா அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
மூட வேண்டும்
பின்னர் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தாசில்தார் செல்லையா, டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர் லியாகத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘டாஸ்மாக் கடையை மூட ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்,’ என்று கேட்டனர். ஆனால் பொதுமக்கள், ‘ஒரு மணி நேரம் கூட அவகாசம் கொடுக்க முடியாது. கண்டிப்பாக டாஸ்மாக் கடையை அடைத்தே தீர வேண்டும்,’ என்றனர்.
அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர், ‘தங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் மது குடித்தே இறந்து விட்டார். தற்போது அந்த பெண் மற்றும் அவருடைய குழந்தைகள் எந்தவித ஆதரவுமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குடியை கெடுக்கும் இந்த குடி தேவையா?. தயவு செய்து பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் டாஸ்மாக் கடை இருக்கவே கூடாது,’ என்று அதிகாரிகள் முன்னிலையில் கதறி அழுதனர். அப்போது தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் இறுக்கமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்படும்,’ என்றனர். இதை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து 11 மணி அளவில் கலைந்து சென்றனர்.
மேலும் பள்ளிபாளையம் பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை வாங்கி வந்து தன்னுடைய வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், அந்த நபரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதுபற்றி அறிந்ததும் கோபி மதுவிலக்கு போலீசார் அந்த நபரின் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். சோதனையில் அவருடைய வீட்டில் 5 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நபரை போலீசார் எச்சரித்து சென்றனர்.

Related Tags :
Next Story