கிராமங்களில் மதுக்கடைகளை அமைக்க கூடாது த.மா.கா. கோரிக்கை
கிராமப்புறங்களில் மதுக்கடைகளை அமைக்க கூடாது என்று த.மா.கா. கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை
பொள்ளாச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கன்னிமுத்து, செல்லமுத்துகவுண்டர், பழனிசெவ்வேல், ரவிச்சந்திரன், முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணிகண்டன் வரவேற்று பேசினார்.
மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான முன்னாள் எம்.பி. சேலம் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாரத்தை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் மதுபானக்கடைகளை அமைக்க முயற்சிப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கிராமங்களில் மதுக்கடைகளை அமைக்க கூடாது.
தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்த நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்கவும், தினக்கூலியாக ரூ.500 வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு காலம் தாழ்தாமல் நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
பெயர் பலகை திறப்பது
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் த.மா.கா கமிட்டி அமைத்து, கொடி கம்பம் நிறுவி, பெயர் பலகை திறப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தலைவர் பகவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பு ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் வி.செல்லத்துரை, கிணத்துக்கடவு வட்டாரத்தலைவர் கிருஷ்ணசாமி, வால்பாறை சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்யாண்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story