நங்கவள்ளி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 367 பேர் கைது
நங்கவள்ளி அருகே போலீசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேச்சேரி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பழ.ஜீவானந்தம் உள்பட கட்சியினர் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்வதாக கூறி, அதை கண்டித்து அந்த கட்சி சார்பில் நங்கவள்ளி பஸ்நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பராயன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நங்கவள்ளி பஸ்நிலையம் அருகே போராட்டம் நடத்த திரண்டனர். ஆனால் ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் உள்பட சிலரை கைது செய்து நங்கவள்ளி அருகே வனவாசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்தனர்.
சாலை மறியல்
இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் மண்டபம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி நங்கவள்ளி–ஜலகண்டாபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கட்சியினரை கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று 2 இடங்களில் நடந்த போராட்டங்களில் கைதான சுப்பராயன் உள்பட 367 பேர் அந்த மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story