சேலத்தில் 3 அரசு டவுன் பஸ்கள் கண்ணாடி உடைப்பு
சேலத்தில் 3 அரசு டவுன் பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் 75 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. அதே வேளையில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு புறப்பட்டு செல்லும் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்காலிக டிரைவர்களை கொண்டும், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்களால் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 5 பஸ்களின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2 டவுன் பஸ் கண்ணாடி உடைப்பு
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3 டவுன் பஸ்கள் சேலம் செவ்வாய்பேட்டை வழியாக இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி, பாப்பம்பாடி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சேலம் செவ்வாய்பேட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே ஒரு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தபோது, மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்கினர். இதனால், பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதுபோல சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் அருகே டவுன்பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது மர்ம ஆசாமிகள் கல்வீசினர். இதனால், பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த கல்வீச்சில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதலுக்கு உள்ளான 2 பஸ்களும் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையம் கொண்டு நிறுத்தப்பட்டது. போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கல்வீசி தாக்கிய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் ஒரு பஸ்
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் ரோட்டில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, மர்ம ஆசாமிகள் சிலர், பஸ்மீது கல்வீசி தாக்கினர். இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பயணிகள் காயம் இன்றி தப்பினர்.
இந்த கல்வீச்சில் சேதமான பஸ், சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story