நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து பணியாளர்கள் 2–வது நாளாக போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியப் பணம் வழங்கக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2–வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் தேரடி திடலில் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. மாவட்ட துணைத்தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. சங்கத்தை சேர்ந்த மாடசாமி, சகாயம், ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி, புதிய தமிழகம் தொழிற்சங்கத்தை சேர்ந்த சுப்பையா, ஓய்வூதியம் சங்கம் சார்பில் செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அய்யப்பன், புதிய தமிழகம் கட்சி சார்பில் அழகர், ஜனதா தளம் கட்சி சார்பில் துரைப்பாண்டி, ஓய்வூதியர் சங்கம் சார்பில் சீதாராமன், ஆறுமுகச்சாமி, ஆவுடையப்பன் உள்பட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி–விக்கிரமசிங்கபுரம்
சேரன்மாதேவியை அடுத்த கூனியூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோர்க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சி.ஐ.பி.யு. நவநீதன், ஏ.ஐ.பி.யு. இளங்கோவன், எச்.எம்.எஸ். முருகேசன், டி.டி.எ.எஸ்.எப். ஆயிரத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்கு திடலில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. நெல்லை மாவட்ட கவுன்சில் செயலாளர் மாஞ்சோலை மைக்கேல் தலைமை தாங்கினார். தொ.மு.ச. தலைவர் செல்வராஜ், செயலாளர் மதிவாணன், பொருளாளர் சோமு, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், செல்வம், பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யு.சி. பீட்டர் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 60–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story