ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருப்பூர்
ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் குன்னம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் மற்றும் பேரூராட்சி செயல்அதிகாரி அண்ணாமலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, குன்னம்பாளையம் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story