பணகுடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1¼ வயது குழந்தை பலி 5–வதாக பிறந்த ஒரே ஆண் குழந்தையை பறிகொடுத்த டெய்லரின் பரிதாபம்
பணகுடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1¼ வயது குழந்தை பலியானது. 4 பெண் பிள்ளைகளை பெற்ற டெய்லர், 5–வதாக பிறந்த ஆண் குழந்தையை பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி,

1¼ வயது குழந்தை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். அதே ஊரில் தையல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். 5–வதாக பிறந்த ஆண் குழந்தையின் பெயர் சுடலைமணி (வயது 1¼).
நேற்று மாலையில் நாகராஜின் குழந்தைகள் அனைவரும் வீட்டின் பின்புறம் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தை சுடலைமணி அங்கு இருந்த சிறிய சிமெண்டு தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.
பரிதாப சாவு
திடீரென்று சுடலைமணி, தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கினான். அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் நாகராஜிடம் விவரத்தை கூறின. உடனே குழந்தையை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுடலைமணி உடலை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் குழந்தையின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்தது. குழந்தைக்கு உயிர் இருக்கிறது என்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று உறுதி செய்தனர். இதையடுத்து குழந்தையின் உடலை பார்த்து நாகராஜ், அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Related Tags :
Next Story