தூவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறக்க மின்சார வாரியம் மறுப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தூவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறக்க மின்சார வாரியம் மறுத்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்தால் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுமட்டுமின்றி அங்குள்ள தூவானம் அணையில் இருந்து தண்ணீர் திறந்தாலும் சுருளி அருவிக்கு தண்ணீர் வரும்.
சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக, பல்வேறு மூலிகை செடிகளை தொட்டபடி அருவிக்கு தண்ணீர் வருகிறது. ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு குளித்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம் ஆகும்.
ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடமாகவும் சுருளி அருவி திகழ்கிறது. இங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் 1,000–க்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
குறிப்பாக தமிழ்ப்புத்தாண்டு, ஆடி அமாவாசை மற்றும் தை அமாவசை உள்ளிட்ட விஷேச நாட்களில் பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட சுருளி அருவி, கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது.
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே அருவியில் நீர்வரத்து இருக்கும். ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லை. அதாவது தூவானம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், கோடைக்காலத்திலும் சுருளி அருவியில் தண்ணீர் வற்றாமல் கொட்டியது. இதனை நம்பி ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து குளித்து செல்வர்.
ஆனால் தற்போது தூவானம் அணையில் இருந்து, சுருளி அருவிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழை பெய்யாத நேரத்தில், தண்ணீர் இன்றி சுருளி அருவி வறண்டு காணப்படுகிறது.
எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சுருளி அருவிக்கு தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தூர்வாரும் பணி
மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் தூவானம் அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது குறித்து மின்சார வாரிய அதிகாரியிடம் கேட்ட போது, தூவானம் ஏரியில் இருந்து உபரி நீர் சுருளி அருவிக்கு செல்லும். இதனால் அருவிக்கு கோடைகாலத்திலும் தண்ணீர் வற்றாமல் வந்தது. உலக வங்கி உதவியுடன், தூவானம் அணையை பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தாலும் அருவிக்கு தண்ணீர் திறக்க மாட்டோம். உபரி நீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டு விட்டது. விழா காலங்களில், மாவட்ட நிர்வாகம் கேட்டால் ஒரு நாள் மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, தூவானம் அணையில் இருந்து கடந்த 2 மாதமாக சுருளி அருவிக்கு தண்ணீர் வரவில்லை. அணையில் இருந்து தண்ணீர் திறக்க மாட்டோம் என்று மின்சார வாரியத்தினர் கூறுவது கண்டனத்துக்குரியது. சுருளி அருவியில் தண்ணீர் வரவில்லை என்றால் சுற்றுலாபயணிகளின் வருகை குறைந்து விடும். எனவே வழக்கம் போல் சுருளி அருவிக்கு தூவானம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story