சென்னை என்ஜினீயரான மகன் காதல் திருமணம் செய்ததால் ஆசிரியை தற்கொலை
சென்னையில் என்ஜினீயராக பணிபுரியும் தனது மகன் காதல் திருமணம் செய்துகொண்டதால், ஓய்வுபெற்ற ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை என்ஜினீயர்
தேனியை சேர்ந்த சுப்புராஜ் என்பவருடைய மனைவி ஜெயபாரதி (வயது 55). ஆசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இவருடைய மகன் மனோஜ் (28) என்ஜினீயரிங் படித்துவிட்டு, சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், தனது உறவினர் ஒருவருடைய மகளை காதலித்துவந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு ஜெயபாரதி எதிர்ப்பு தெரிவித்தார்.
காதல் திருமணம்
ஆனால் தாயாரின் எதிர்ப்பை மீறி, கடந்த 12–ந்தேதி மனோஜ் காதலித்த பெண்ணை சென்னையில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பிறகு தனது தாயாரை சமாதானம் செய்வதற்காக நேற்று காலையில் தேனிக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
வீட்டின் கதவை மனோஜ் தட்டியும் திறக்கப்படவில்லை. அப்போது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தேனி போலீசாருக்கு மனோஜ் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தற்கொலை
போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் ஜெயபாரதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். பிணம் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து சில நாட்கள் இருக்கும் என தெரிகிறது. மகன் காதல் திருமணம் செய்த நாளில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story