போலி பில் மூலம் சவுடு மண் கடத்தல்: லாரிகள், ஒரு பொக்லைன் எந்திரம் பறிமுதல்
வெங்கல் அருகே போலி பில் மூலம் சவுடு மண் கடத்தல் 4 லாரிகள், ஒரு பொக்லைன் எந்திரம் பறிமுதல்
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள செம்பேடு ஏரியில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் போலி பில் மூலம் சவுடு மண் கடத்துவதாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில், நேற்று அதிகாலை அந்த பகுதியில் அவர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது போலி பில் மூலம் சவுடு மண் கடத்தி வந்த 4 லாரிகளை மடக்கி சோதனை செய்து பறிமுதல் செய்தார். மேலும் மண் அள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் எந்திரத்தையும் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பறிமுதல் செய்தார்.
பறிமுதல் செய்த 5 வாகனங்களும் வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story