விராரில், தண்டவாளம் அருகே அனாதையாக கிடந்த பெண் குழந்தை மீட்பு


விராரில், தண்டவாளம் அருகே அனாதையாக கிடந்த பெண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 17 May 2017 1:17 AM IST (Updated: 17 May 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் மாவட்டம் விரார் ரெயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் தண்டவாளம்

வசாய்

பால்கர் மாவட்டம் விரார் ரெயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் மாலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அநாதையாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தைக்கு வாடாமல்லி நிற ஆடை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அவர்கள் விரார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு விரார் ஊரக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தனர்.  குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். அது 3 மாத பெண் குழந்தை என்பது தெரியவந்தது. அந்த குழந்தையை தண்டவாளத்தின் அருகே போட்டு சென்றது யார்? குழந்தையின் தாய் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவனம் நடத்திரூ.20 கோடி மோசடி செய்தவர்
5 வருடத்திற்கு பிறகு கைதுமத்திய பிரதேசத்தில் சிக்கினார்

Related Tags :
Next Story