அதிக வட்டி தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்தவரை 5 வருடத்திற்கு பிறகு மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்தவரை 5 வருடத்திற்கு பிறகு மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 17 May 2017 1:19 AM IST (Updated: 17 May 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்தவரை 5 வருடத்திற்கு பிறகு மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் ரமணி நிவாஸ்பால், ராம் சுமிரன்பால், மன்சூர் சித்திக் ஆகியோர் கடந்த 2012–ம் ஆண்டு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். தங்களிடம் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் திருப்பி தருவதாக தெரிவித்தனர். இதை நம்பி அவர்களது நிறுவனத்தில் பலர் முதலீடு செய்தனர்.

டாக்டர் ஒருவர் ரூ.35 லட்சம் வரை இவர்களது நிறுவனத்தில் செலுத்தியிருந்தார். ஆனால் டாக்டர்கள் உள்பட தங்களிடம் பலர் முதலீடு செய்திருந்த ரூ.20 கோடியை சுருட்டி கொண்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

கைது

இந்த மோசடி குறித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமணிநிவாஸ் பால், ராம் சுமிரன்பால் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மன்சூர் சித்திக்கை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், அவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் மும்பை அழைத்துவரப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். மன்சூர் சித்திக் 5 வருடத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story