எழும்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டித்தர வலியுறுத்தி குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. மனு


எழும்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டித்தர வலியுறுத்தி குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் தொகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டித்தர வலியுறுத்தி குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சம்பு கல்லோலிக்கரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. மனு

சென்னை

எழும்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சம்பு கல்லோலிக்கரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

61-வது வார்டு டாக்டர் சந்தோஷ் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆகவே, இக்குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். 77-வது வார்டில் கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் 15 முதல் 35 வரையுள்ள பிளாக்குகளை இடித்துவிட்டு புதிய பிளாக் கட்ட வேண்டும்.

இதேபோல், 77-வது வார்டில் உள்ள பி.கே.காலனி, 104-வது வார்டில் உள்ள ஆர்.கே.புரம், ஒசான்குளம், நேரு பார்க், கங்காதீஸ்வரன் கோவில் ஆகிய இடங்களில் உள்ள பழைய குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். திடீர் நகரில் புதிய குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 107-வது வார்டு எம்.எஸ்.நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story