மங்களூருவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
மங்களூரு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக எடுத்துச் சென்றபோது சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மேலும் அந்த ரெயிலில் இருந்து டீசல் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகத்தின் பிற மாவட்டத்திற்கும், சென்னை, திருவனந்தபுரம் உள்பட அண்டை மாநிலத்திற்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8.30 மணியளவில் மங்களூரு 2-வது நடைமேடையை வந்தடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.
ஒவ்வொரு முறையும் பயணிகள் இறங்கி சென்றதும், ரெயில் பின்நோக்கி இயக்கப்பட்டு 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மார்னமிகட்டா பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அதன்பின் முன்னோக்கி ரெயிலை இயக்கி மீண்டும் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் முன்பு உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.
ரெயில் தடம் புரண்டது
அதேபோல் நேற்றும் பயணிகள் இறங்கி சென்றதும், ரெயிலை என்ஜின் டிரைவர் பின்நோக்கி இயக்கி மார்னமிகட்டாவுக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் திடீரென தடம் புரண்டது. இதனால் ரெயிலின் கடைசி பெட்டி மட்டும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
இதனால் என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தடம் புரண்ட ரெயிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது என்ஜின் டிரைவர் ரெயிலை பின்நோக்கி வேகமாக இயக்கியதால் ரெயில் தடம்புரண்டது தெரியவந்தது. இதற்கிடையே என்ஜினில் இருந்து திடீரென டீசல் கசிந்தது. இதனை கவனித்த அதிகாரிகளும், மீட்பு குழுவினரும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் டீசல் கசிவை சரிசெய்தனர். மேலும் ரெயில், தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் 5-க்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதம் அடைந்தன. இதனை தொடர்ந்து மீட்பு குழுவினர் 5 மணி நேரத்தில் சேதம் அடைந்த ரெயிலை தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர். இதனால் வழக்கம்போல அந்த பாதையில் ரெயில்கள் இயங்கின.
பரபரப்பு
பராமரிப்பு பணிக்காக கொண்டு சென்றபோது ரெயில் தடம் புரண்டு டீசல் கசிந்ததால் மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story