கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி கையாடல்: பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது
வையம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அந்த சங்கத்தில் உறுப்பினர்களின் நிரந்தர வைப்பு தொகையில் பணம் கையாடல் செய்யப்பட்டது. ரூ.1 கோடியே 2 லட்சத்து 94 ஆயிரத்து 678 வரை மோசடி நடந்ததாக திருச்சி வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோசடி 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு கால கட்டத்தில் நடந்தது விசாரணையில் தெரிந்தது. மேலும் சங்கத்தின் செயலாளர் கணேஷ்வரி (வயது51) மற்றும் அந்த கால கட்டத்தில் தலைவராக இருந்த முத்துசாமி ஆகியோர் பணம் கையாடலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதையடுத்து சங்க செயலாளர் கணேஷ்வரி, முன்னாள் தலைவர் முத்துசாமி (41) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கைதான கணேஷ்வரி தற்போது தற்காலிக பணியிடை நீக்கத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story