அனுபவமில்லாத டிரைவர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை அமைச்சர் பேட்டி
அனுபவமில்லாத டிரைவர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பஸ்கள் இயக்கப்படுவது குறித்து கேட்டறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பஸ்களை இயக்கும் டிரைவர்களுக்கு கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் அதனை சரிகட்டும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து பகுதிகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
அனுபவம் வாய்ந்தவர்கள்
கும்பகோணம் மண்டல போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும். இதனை ஏற்றுக்கொண்டு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். தஞ்சை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், புதிய டிரைவர்கள் பஸ்களை இயக்கி வருகிறார்கள். புதிய டிரைவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அனுபவம் இல்லாத டிரைவர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. கண்டக்டர் பணிக்கு, படித்தவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ரெங்கசாமி எம்.எல்.ஏ., பால்வள தலைவர் காந்தி, மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குனர் சரவணன், கல்வி புரவலர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வேங்கை.கணேசன், இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story