மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 11.6.2017 வரை கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்வுகளான அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் வருகிற 29, 30, 31-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
நடவடிக்கை
திருவிழாவை யொட்டிஅதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கோவிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றுக்கு எடுத்து செல்லும் பகுதி, ஆற்றில் கம்பம் விடும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குளிப்பதற்கு செயற்கை நீருற்றுகள் அமைப்பதற்கும், தேவையான இடங்களில் தற்காலிக கழிவறைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தற்காலிக மின் விளக்குகள், சாலையோரங்களில் சவுக்கு மரங்களை கொண்ட தற்காலிக தடுப்புகள் அமைக்கப்படவுள்ளன. கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுபவர்களால் கொண்டு வரப்படும் வேப்பந்தழைகள், நாணல்கள் ஆகியவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்திடவும், அக்னி சட்டிகளை அவ்வப்போது கோவில் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
சிறப்பு பஸ்கள்
தேவையான அளவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், போக்குவரத்து வழித்தடத்தை மாற்றி அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர காலத்திற்கு பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழுவினர் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும், நகரில் பல்வேறு இடங்களில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்கு நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.சட்டம்-ஒழுங்கு மற்றும் நகரில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் மூலம் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவப்பிரியா, கோவில் அறங்காவலர் முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story