புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டித்தள்ளியதில் 30 பேர் காயம்
புள்ளம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டித்தள்ளியதில் 30 பேர் காயம் அடைந்தனர். இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள மந்தையில் 16 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடத்தப்பட்டது. காலை 8 மணி அளவில் கோவில் மாடுகள் 14 மற்றும் உள்ளூர் மாடுகள் 30 என 44 மாடுகளை மேளதாளம் முழங்க ஊர்வலமாக பழைய வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு குழுந்தாளம்மன் கோவில், சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி கும்பிட்ட பின்னர் ஊர்வலமாக மந்தைவெளியில் உள்ள வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர்.
அங்கு காலை 9 மணி அளவில் கோவில் மாடுகளும், உள்ளூர் மாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டை லால்குடி கோட்டாட்சியர் கோவிந்தராஜன், தாசில்தார் ஜவகர்லால் நேரு, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டி போட்டு அடக்கினர்
இதையடுத்து திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 499 ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு மாடு தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் 498 மாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. துள்ளிக்குதித்து வந்த மாடுகளை அடக்குவதற்காக பச்சை, ஊதா, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்த 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.
சில மாடுகள் மாடுபிடி வீரர்களை கொம்பால் முட்டி தள்ளி விட்டு பிடிபடாமல் ஓடின. சில மாடுகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
30 பேர் காயம்
இதில் மாடுகள் முட்டித்தள்ளியதில் 27 பேருக்கு லேசான காயமும், 3 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. லேசான காயம் அடைந்தவர்கள் புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பலத்த காயம் அடைந்த 3 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளிக்காசுகள், பணம், பீரோ, கட்டில், குக்கர் உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், புள்ளம்பாடி, அரியலூர் போன்ற ஊர்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

Related Tags :
Next Story