பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்


பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 18 May 2017 2:30 AM IST (Updated: 17 May 2017 7:51 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து, இறுதி ஊர்வலம் நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து, இறுதி ஊர்வலம் நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடை கட்டி போராட்டம்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில், அரியப்புரம் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுற்று வட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தென்காசி தாசில்தார் அனிதா பேச்சுவார்த்தை நடத்தி மனு வாங்கி சென்றார். ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் போராட்டகாரர்கள் கடையின் எதிரே பந்தல் அமைத்து சமையல் செய்து சாப்பிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. அப்போது போராட்ட குழுவினர் மது பாட்டில்களை வைத்து பாடை கட்டி ஒப்பாரி வைத்து, இறுதி ஊர்வலம் நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

7–வது நாளாக....

இதே போல் பாவூர்சத்திரம்–கடையம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து நேற்று 7–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story