மாடியில் இருந்து தள்ளி விட்டதில் தொழிலாளி படுகாயம் நிலத்தரகருக்கு வலைவீச்சு
உடன்குடியில் ஜோதிடம் பார்க்க செல்வதில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை மாடியில் இருந்து தள்ளி விட்ட நிலத்தரகரை போலீசார் தேடி வருகின்றனர்.
உடன்குடி,

ஜோதிடரை பார்க்க சென்றபோது...
உடன்குடி அருகே பிச்சிவிளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47). இவர் சென்னையில் சைக்கிளில் காபி, டீ, சுண்டல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இவர் கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் விஜயகுமார், அவருடைய மனைவி கலைச்செல்வி ஆகிய 2 பேரும் உடன்குடி– திசையன்விளை ரோட்டில் உள்ள வணிக வளாகத்தின் மாடியில் உள்ள ஜோதிடரை பார்ப்பதற்காக சென்றனர்.
மாடியில் இருந்து விழுந்து...
உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்தவர் மால் நாடார் மகன் ரவி. நிலத்தரகர். இவரும் ஜோதிடரை பார்ப்பதற்காக அங்கு சென்றார். அப்போது ரவி வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக ஜோதிடரை பார்க்க சென்றார். இதனை விஜயகுமார் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ரவி, விஜயகுமாரை கீழே தள்ளி விட்டார். வணிக வளாகத்தின் மாடியில் தடுப்பு சுவர் இல்லாததால், சுமார் 10 அடி உயரத்தில் இருந்து விஜயகுமார் தவறி சாலையில் விழுந்தார்.
நிலத்தரகருக்கு வலைவீச்சு
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜயகுமாருக்கு உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரவியை தேடி வருகிறார்.

Related Tags :
Next Story