அந்தியூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
அந்தியூர் அருகே உள்ள மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு
அந்தியூர் அருகே உள்ள மூலக்கடையில் கடந்த 10 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே அரசு பள்ளிக்கூடம், நடுநிலைப்பள்ளிக்கூடம், அரசு பெண்கள் விடுதி போன்றவை உள்ளன. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ–மாணவிகளும், விடுதிக்கு செல்லும் மாணவிகளும் மதுக்கடை அமைந்துள்ள ரோட்டை கடந்துதான் சென்றுவந்தார்கள்.
இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்படி அந்தியூர் எண்ணமங்கலம், மூலக்கடை, கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. அதனால் குடிமகன்கள் அதிக அளவில் மூலக்கடையில் பள்ளிக்கூடம் அருகே செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு படையெடுக்க தொடங்கினார்கள்.
முற்றுகை போராட்டம்
எப்போதும் நீண்ட வரிசையில் நின்றுகொண்டு குடிமகன்கள் மதுபாட்டில்கள் வாங்குவதும், ரோட்டிலேயே நின்றுகொண்ட சிலர் மது அருந்துவதும் அந்த வழியாக சென்று வந்த பொதுமக்களையும், மாணவ–மாணவிகளையும் பெரும் அவதிக்குள்ளாக்கியது.
இந்தநிலையில் நேற்று காலை 12 மணியளவில் மூலக்கடையை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்து, ‘உடனே கடையை மூடவேண்டும்‘ என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கடையை மூடவேண்டும்
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம், “ஏற்கனவே இந்த கடையில் குடிமகன்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இப்போது மற்ற பகுதியில் இருந்தும் கும்பல் குப்பலாக மதுகுடிக்க வருகிறார்கள். அதனால் பெண்களும், மாணவ–மாணவிகளும் இந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். உடனே கடையை மூடவேண்டும்“ என்று உத்தரவிட்டார்கள்.
அதற்கு போலீசார் பொதுமக்களிடம், ‘இப்போது போராட்டத்தை கைவிடுங்கள். இதுபற்று இன்று மாலை (நேற்று) தாசில்தார் அலுவலகத்தில் பேசி நல்ல முடிவு எடுக்கலாம்‘ என்று கூறினார்கள். அதை ஏற்று பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

Related Tags :
Next Story