விசைத்தறி தொழிலை பாதுகாக்க குரல் கொடுப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேச்சு
விசைத்தறி தொழிலை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குரல் கொடுக்கும் என்று அந்த கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.
மதுரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் சத்திரரெட்டியபட்டியில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணனிடம் ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு காலத்தில் கைத்தறி நெசவு தொழில் செய்து வந்தனர். தற்போது வயதானதால் அரசின் உதவித் தொகையை எதிர்பார்த்து உள்ளார்கள். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என இப்போது 3–வது தலைமுறையாக வந்துள்ளனர்.
குரல் கொடுப்போம்
3–வது தலைமுறையை சேர்ந்தவர் விசைத்தறியில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். காரணம் தொழிலில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியே ஆகும். கைத்தறி என்பது மாறி இப்போது விசைத்தறி வந்துள்ளது. எப்படியாவது இந்த தொழிலை விட்டு தப்பித்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இளைஞர்கள் உள்ளனர். அதேபோல் விவசாயமும் உள்ளது. ஒரு காலத்தில் தாத்தா விவசாயம் செய்தார். பின்னர் அப்பா விவசாயம் பார்த்தார். ஆனால் இன்றைய தலைமுறை விவசாயம் பார்க்க தயாரில்லை. மாறாக வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர்.
விசைத்தறி மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வாழ முடியவில்லை. இந்த தொழில்களை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எப்போதும் குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story