மேலூர் பகுதியில் சூறாவளிக்காற்றால் மின்சாரம் இன்றி 2 நாட்களாக இருளில் தவித்த மக்கள் சாலை மறியல்
மேலூர் அருகே சூறாவளிக் காற்றினால் தடைபட்ட மின்சாரம் 2 நாட்களாகியும் சீராகாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை
மேலூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் நத்தம் ரோட்டில் உள்ள சுந்தராஜபுரம் கிராமத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. கட்டிடங்களின் சிமெண்டு மேற்கூரைகள் காற்றில் பறந்து நொறுங்கின. மின் கம்பங்கள் வீடு மற்றும் தெருக்களில் சாய்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றியும், குடிதண்ணீர் கிடைக்காமலும் கடந்த 2 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். தெருக்களில் விழுந்த மின் கம்பிகள் அகற்றப்படாததால் தெருக்களில் நடக்க முடியாமல் கடந்த 2 நாட்களாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து 2 நாட்களாகியும் மின்சாரம் வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலையில் மேலூர்–நத்தம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ரோட்டின் குறுக்கே முட்களையும், கற்களையும் போட்டு கண்டன கோஷமிட்டனர்.
நீண்ட நேரத்துக்கு பின்னர் அங்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் மின் வினியோகத்தை விரைவாக சரி செய்வதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சில மின் ஊழியர்கள் கீழே கிடந்த மின் கம்பிகளை ஒதுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
மீண்டும் மறியல் செய்ய முடிவு
சுந்தரராஜபுரத்தில் மொத்தம் 4 தெருக்கள் உள்ளன. இதில் தென்பகுதியில் உள்ள 2 தெருக்களுக்கு மட்டும் நேற்று மின் வினியோகம் சரி செய்யப்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள 2 தெருக்களுக்கு இன்னும் மின்சார வினியோகம் சீராக வில்லை.
2 நாட்களாக இருளில் தவித்து வரும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு விரைவில் மின்சார வினியோகத்தை சீராக்க வில்லை என்றால் மீண்டும் இன்று மறியலில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story