திருத்தங்கலில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர், நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை
குடிநீர் குழாயில் ஓட்டை விழுந்துள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய திருத்தங்கல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
அக்னி நட்சத்திரம் தொடங்கி கடுமையான வெயில் இருப்பதால் நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. இந்த நிலையில் குடிக்க தண்ணீர் இன்றி பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்த வேண்டிய ஒரு நிலை உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
வீணாகும் தண்ணீர்
குடிநீர் வினியோகிக்க அனைத்து பகுதிகளிலும் குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு இடங்களில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு பின்னர் தேவைக்கேற்ப ஒவ்வொரு பகுதியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் செக்போஸ்ட் அருகில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் போது அந்த தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அந்த பகுதியில் அமைக்கப்பட்ட குழாயில் பல இடங்களில் ஓட்டை இருப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். குடிநீர் வினியோகம் செய்யும் போது அதிக அளவில் தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை
ஏற்கனவே போதிய குடிநீர் இன்றி மாவட்டம் முழுவதும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் திருத்தங்கல் நகராட்சி பகுதியில் போதிய குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற பிரச்சினையால் தண்ணீர் வீணாகி வருவது வேதனைக்குரியது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்து அதில் பழுது ஏற்பட்டு இருந்தால் அதை சரி செய்ய தேவையான நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story