நெய்வேலி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகையிட திரண்டு வந்த பெண்கள்
நெய்வேலி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகையிட திரண்டு வந்த பெண்கள், நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்
நெய்வேலி,
நெய்வேலி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடையை முற்றுகையிட பெண்கள் திரண்டு வந்தனர். அவர்களிடம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோரிக்கை மனு
கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொள்ளிருப்பு ஊராட்சியில் கைக்கிளார்குப்பம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த டாஸ்மாக் கடையினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக கூறி இந்த கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடையை ஊராட்சியில் இருந்து அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட கலெக்டர், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் குவிப்பு
ஆனால் இதுவரை கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 17-ந்தேதி(அதாவது நேற்று) முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக கைக்கிளார்குப்பம் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடை முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
நடவடிக்கை எடுக்க உறுதி
இந்நிலையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக கைக்கிளார்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கடை முன்பு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 15 நாட்களுக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தெரிவித்தார்.
15 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் கடையை உடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story