தாராபுரத்தில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
தாராபுரம் அருகே உள்ள ஊத்துப்பாளைத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்,
தாராபுரம் ஒன்றியம், தளவாய்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பாளையம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகமோ, ஒன்றிய நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு அப்பகுதியைச்சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து ஊத்துப்பாளையத்தை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
தளவாய்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பாளையம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதிக்கு முன்பு அமராவதி குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தில் குடிநீர் வழங்குவதில்லை. காரணம் கேட்டபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். அதன் பிறகு ஊரில் உள்ள பொதுக்கிணற்றிலிருந்துதான் குடிநீர் எடுத்து வந்தோம்.
லாரி மூலம் வினியோகிக்கலாம்
இது தவிர ஊராட்சியின் மூலம் ஒரு ஆழ்குழாய்கிணறு அமைத்து தரப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக பொதுகிணற்று தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் ஆழ்குழாய் கிணறும் வற்றிவிட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகிறோம். ஒரு வேளை உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிணறுகளும் வறண்டு விட்டதால், எங்கு சென்றாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.
குடிநீர் பற்றாக்குறையை போக்க இந்த பகுதியில் கூடுதலாக இன்னும் 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டும். ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் வரை இந்த பகுதிக்கு நாள்தோறும் லாரி மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பலமுறை மனுகொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தான் காலிக்குடங்களுடன் வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்று கூறினார்கள்.
தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள். அதைத்தொடர்ந்து பெண்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story