வசதி படைத்தவர்கள் வைத்துள்ள சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும்: கவர்னரிடம், மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்
வசதி படைத்தவர்கள் வைத்துள்ள சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, கவர்னர் கிரண்பெடியிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் ரேஷன் கார்டுகள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பெறப்பட்டது. இதில் மாகியை தவிர அனைத்து பிராந்தியங்களிலும் மஞ்சள் கார்டை விட, சிவப்பு கார்டுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
புதுவை மாநிலத்தில் மொத்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 3,36,339 ஆகும். இதில் 1,80,211 சிவப்பு நிற கார்டுகள் உள்ளன. ஏனாம் பகுதியில் மட்டும் 15,949 ரேஷன் கார்டுகளில் 11,806 சிவப்பு நிற கார்டுகள் உள்ளன. பலர் முறைகேடாக சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை பெற்றிருப்பது தெரியவருகிறது.
பல கோடி ரூபாய் வீண்
அரசின் நலத்திட்ட உதவிகள், இலவச திட்டங்களை பெறுவதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் சிபாரிசு அடிப்படையில் எந்த ஆய்வும் இன்றி சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்களின் ரேஷன் கார்டுகளை சிபாரிசு அடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் துறையினர் சிவப்பு நிற கார்டுகளாக மாற்றி கொடுத்துள்ளனர். இதனால் அரசின் நிதி பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது. இதனால் தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் போகிறது.
எனவே முறைகேடுகளை தடுக்க அரசு ஊழியர்களுக்கு மஞ்சள், சிவப்பு நிறம் தவிர்த்து தனி நிறத்தில் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வின்போது தகுதியில்லாதவர்களின் சிவப்பு நிற கார்டுகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story