திருத்தணியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து படுகாயம் அடைந்தவர் சாவு
திருத்தணியில் அரக்கோணம் சாலை சரஸ்வதி நகர் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் வெடித்து தீப்பொறி ஏற்பட்டது.
திருத்தணி,
திருத்தணியில் அரக்கோணம் சாலை சரஸ்வதி நகர் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் வெடித்து தீப்பொறி ஏற்பட்டது. இதில் திருத்தணியை அடுத்த கீழாந்தூரை சேர்ந்த பூபாலன் (வயது 27), அவரது நண்பர் பாலாஜி (43), காஞ்சீபுரத்தை சேர்ந்த தாமோதரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களில் பூபாலன், பாலாஜி இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பூபாலன் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story