புழல் அருகே தனியார் பள்ளியை சேர்ந்த 154 பஸ்கள் ஆய்வு


புழல் அருகே தனியார் பள்ளியை சேர்ந்த 154 பஸ்கள் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 18 May 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி, எண்ணூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி புழல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

செங்குன்றம்,

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பொன்னேரி, எண்ணூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி புழல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 9 பள்ளிகளை சேர்ந்த 154 பஸ்களை செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் ஆய்வு செய்தார். அதில் 6 பஸ்கள் தகுதியற்றவை என நிராகரிப்பு செய்தார். இந்த ஆய்வின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார், ‘‘வாகனங்களை ஓட்டும் போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பஸ்சில் ஏற்றிச்செல்லும் பள்ளி குழந்தைகளை தங்கள் குழந்தைகளை போல் பாவித்து பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்’’ என 154 பஸ்களின் டிரைவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.


Next Story