நேரு பூங்கா - திருமங்கலம் இடையே மெட்ரோ ரெயிலில் பயண அட்டைக்கு பதிலாக டிக்கெட் வழங்க பயணிகள் கோரிக்கை
நேரு பூங்கா-திருமங்கலம் இடையே மெட்ரோ ரெயிலில் பயண அட்டைக்கு பதிலாக டிக்கெட் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னை
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பணியில் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை 7.40 கிலோ மீட்டர் தூர பணிகள் நிறைவடைந்து 14-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அதன்படி நேரு பூங்காவில் இருந்து விமானம் நிலையம் வரை ஒரே ரெயிலில் ரூ.60 கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.
வெறிச்சோடியது
சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்ட 4-வது நாளிலேயே பெரும்பாலான ரெயில்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுரங்கப்பாதை வழித்தடத்தில் ரூ.50 செலுத்தி பயண அட்டை பெற்ற பின்னரே பயணிகள் பயணத்தை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பயணம் செய்ய ஆர்வத்தோடு வரும் பொதுமக்கள், கட்டணத்தை கேட்டதும் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதையும் காணமுடிகிறது.
அலுவலகம் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளை விட, சுரங்கப்பாதை ரெயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை பெறுவதற்காக பள்ளி சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் பயணம் செய்வதை காணமுடிந்தது. நேரு பூங்கா ரெயில் நிலையத்தில் ஏறிய பயணிகளுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக ரூ.50 மதிப்பில் பயண அட்டை வழங்கப்பட்டது.
பயண அட்டை வேண்டாம்
இதுகுறித்து அண்ணாநகரை சேர்ந்த உமாமகேஸ்வரி கூறியதாவது:-
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய குழந்தைகளை அழைத்து வந்தேன். ஒரு நபருக்கு ரூ.50 செலுத்தி பயண அட்டை வாங்கினால் தான் பயணம் செய்ய முடியும் என்று கூறினர். எனவே வேறு வழியின்றி, நாங்கள் 6 பேருக்கு ரூ.300 செலுத்தி பயண அட்டையை வாங்கி கொண்டு பயணம் செய்தோம்.
சலுகை கட்டணத்தில் ரெயில்கள் இயக்குவதாக கூறப்படுவதுடன், பயணத்திற்கு பிறகு ஒவ்வொரு பயண அட்டையிலும் ரூ.16 பாக்கி இருப்பதாகவும் கவுண்ட்டர்களில் இருப்பவர்கள் கூறுகின்றனர். மீண்டும் பயணம் செய்யும் போது பயண அட்டையில் இருக்கும் தொகையுடன், பாக்கி தொகையை செலுத்தி பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கின்றனர்.
கட்டணம் அதிகம் என்ற நிலையில் பொதுமக்களில் பலர் அடிக்கடி இந்த ரெயிலில் பயணிப்பதற்கு வாய்ப்பு இல்லை. எங்களுக்கு பயண அட்டை தேவையற்றது. சலுகை கட்டணத்திற்கான டிக்கெட்டை வழங்கியிருக்க வேண்டும். தினசரி பயணம் செய்பவர்களுக்கு பயண அட்டைகளை வழங்கலாம். எனவே நேரு பூங்கா-திருமங்கலம் இடையே எங்களை போன்று வந்து செல்பவர்களுக்கு டிக்கெட் தான் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
அதிக கட்டணம் ஏன்?
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இதுபோன்ற நவீன வசதிகளுடனும், பெரிய கட்டமைப்புகளுடனும் கூடிய திட்டத்தில் கட்டணம் சற்று அதிகம் என்பது இருக்கத்தான் செய்யும். உயர்த்தப்பட்ட பாதையை விட சுரங்கப்பாதை பயணிகளுக்கு சேவை அதிகம் அளிக்க வேண்டியுள்ளது.
அனைத்து தரப்பினரும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் கட்டண முறைகளை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக செலவிடப்பட்ட செலவினங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story