டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
தர்மபுரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
தர்மபுரி,
தேசிய டெங்கு விழிப்புணர்வு தினத்தையொட்டி டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாமிநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஊர்வலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் தர்மபுரி நகரின் முக்கிய சாலைகளில் சென்றனர்.
உடனடி சிகிச்சை
வீடுகள், பொது இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும். பயன்படுத்தப்படாத பாட்டில்கள், பிளாஸ்டிக் குவளைகள், தேங்காய் ஓடுகள், டயர்கள், மண்பாண்டங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தொடர் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளை உடனடியாக அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். வீடுகளில் குடிநீர் சேகரிக்கும் தொட்டிகள், பேரல்கள், பாத்திரங்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும் என்று இந்த ஊர்வலத்தில் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஊர்வலத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் சிவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் நீலா உள்பட மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story