மரத்தில் மொபட் மோதியதில் தொழிலாளி பலி


மரத்தில் மொபட் மோதியதில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 18 May 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே மரத்தின் மீது மொபட் மோதியதில் விவசாய கூலித்தொழிலாளி பலியானார்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் இந்திராநகரை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது45). விவசாயக்கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று மதியம் பாலசமுத்திரத்தில் இருந்து மொபட்டில் தொட்டியம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாலசமுத்திரம் மயானம் அருகே உள்ள திருப்பத்தில் திரும்பிய போது எதிரே உள்ள புளியமரத்தில் பத்மநாபன் ஓட்டி சென்ற மொபட் எதிர்பாராதவிதமாக மோதியது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட பத்மநாபனை அவ்வழியே சென்றவர்கள் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பரிதாபமாக உயிழந்தார்.

இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் பத்மநாபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story