தா.பழூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
தா.பழூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
தா.பழூர்,
அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் வண்டல் மண் மற்றும் சவுடு மண் எடுப்பது தொடர்பாக அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் அண்மையில் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தா.பழூர் ஒன்றியத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தா.பழூர் முதல்நிலை ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி அறிக்கை வாசித்தார். ஒன்றிய ஆணையர் ஜாகிர் உசேன் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து சோழமாதேவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் அறிக்கை வாசித்து வரவேற்றார். பற்றாளர் பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இதேபோல் தா.பழூர் பகுதியில் உள்ள உதயநத்தம், அணைக்குடம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள், ஏரி, குளங்கள் ஆகியவற்றில் வண்டல் மண் மற்றும் சவுடு மண் எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என கிராம சபை கூட்டத்தில் மக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Tags :
Next Story