அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2017 4:30 AM IST (Updated: 18 May 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் சொத்து ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை கிரீன்வேஸ் சாலை வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள வீடு, அலுவலகம், விராலிமலை சாலையில் உள்ள லாட்ஜ், கல்குவாரி, மேட்டுசாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கல்லூரிகளில் நடந்த சோதனையை தொடர்ந்து அங்ளகு கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை ஒரு அறையில் வைத்து பூட்டி சென்றுள்ளனர். இதேபோல் வீட்டிலும் சில ஆவணங்கள், தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மூடி முத்திரையிட்டு ஒரு அலமாரியில் வைத்து பூட்டி சென்றனர்.

சொத்து ஆவணங்கள்

இந்த நிலையில் சென்னை மண்டல துணை இயக்குனர் கார்த்திக்மாணிக்கம் தலைமையில் 4 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று இலுப்பூர் வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் கல்லூரிகளில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து மீண்டும் நகை மற்றும் ஆவணங்களை சரிபார்த்து ஆய்வு செய்தனர்.

பின்னர் சில சொத்து ஆவணங்களை மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்த ஆய்வு மாலை வரை நடைபெற்றது. இதனால் இலுப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story