ரூ.100 கோடி சொத்து குவிப்பு வழக்கு: மகாடா முன்னாள் அதிகாரியின் சகோதரர் கைது
ரூ.100 கோடி சொத்து குவிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த மகாடா முன்னாள் அதிகாரியின் சகோதரர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
மும்பை

சொத்து குவிப்பு
மும்பையில் கடந்த 2012-ம் ஆண்டு மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுத்துறை ஆணைய (மகாடா) அதிகாரியாக இருந்தவர் நிதிஷ் தாக்குர். ரூ.28 ஆயிரம் மாத சம்பளம் பெற்று வந்த நிதிஷ் தாக்குர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடி வரை சொத்து சேர்த்து இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனைத்தொடர்ந்து நிதிஷ் தாக்குர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கில் நிதிஷ் தாக்குருடன் சேர்த்து அவரது மனைவி மீனல், தாய் சாயா மற்றும் சகோதரர் நிலேஷ் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது
விசாரணையில் நிதிஷ் தாக்குர் அலிபாக், முருட், பெல்கடடே, கோல்காவ், கோடேகர், சிக்லி, காந்திவிலி, கோராய், போரிவிலி, வில்லேபார்லே, அந்தேரி, கரோடியாநகர், காட்கோபர் உள்பட 26 இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றில் 7 சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர். 2015-ம் ஆண்டு அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.56 கோடி வைப்பு தொகையும் கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு பயந்து நிலேஷ் தலைமறைவாகி விட்டார். அமலாக்கத்துறையினர் கடந்த 5 வருடமாக அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், அவரை மும்பையில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story